அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே நிவாரணங்கள் சலுகைகள் கிடைக்க வேண்டும் இதனை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கோரிக்கை......!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே நிவாரணங்கள் சலுகைகள் கிடைக்க வேண்டும் இதனை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கோரிக்கை......!
கடந்த சில நாட்களுக்கு முன் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை முழுவதும் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பட்ட பகுதியில் மோசமாக பாதிக்கப்பட்டடது
அதன் தொடர்ச்சியாக அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஆனாலும் குறித்த நிவாரண மற்றும் சலுகைகள் முழுமையாக மற்றும் அதிகபட்சம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வில்லை இதனை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஏற்பட்ட அனர்த்தத்தின் போது உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் சலுகைகள் சென்றடையவில்லை என மக்கள் நாட்டின் பல பகுதிகளில் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
உண்மையில் இவ் பேரிடரில் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தது உடன் பல்லாயிரக்கணக்கான சொத்த்துக்கள் கால்நடை அழிவுகள் என்பவற்றை இழந்து தான் எமது தாயக மக்கள் உளள்னர்
ஆனாலும் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்யும் அளவுக்கு அரச அதிகாரிகள் கவனம் எடுக்கவில்லை என மக்கள் எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றனர் எனவும்
இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கண்காணிப்பு நடவெடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் தமது பணியை நேர்மையாகவும் உள திருத்தி உடன் செய்ய வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்
