Breaking News

சுனாமி 21 வது ஆண்டு நினைவு தினம் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் அனுஷ்டிப்பு

 சுனாமி 21 வது ஆண்டு நினைவு தினம் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் அனுஷ்டிப்பு


 21 வது சுனாமி நி


னைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.


இதில் மலர் மாலையினை பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன் அணிவித்ததுடன் அஞ்சலி நிகழ்வை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. 


தொடர்ந்து தேசிய கொடியினை முள்ளியான் கிராம அலுவலர் ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைசுடரினை உயிரிழந்தவர்கள் சார்பாக உறவினர் ஒருவர் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


தொடர்ந்து அஞ்சலி உரையை கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலய பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் நிகழ்த்தினார்


இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி

னர்.