தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்
பூ.லின்ரன்
செய்தியாளர்
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.
மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
