அம்பாறையில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு.....!
பூ.லின்ரன்
செய்தியாளர்
அம்பாறையில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு.....!
நேற்றைய(12) தினம் அம்பாறை சாய்ந்தமருதுவில் 2025 ஆண்டு சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது
இவ் நிகழ்வானது குரு வலையமைப்பின் இரண்டாம் கட்ட விருது வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது இவ் நிகழ்வில் சாதனை உலகில் இலங்கை முழுவதும் இருந்து சாதனையாளர்கள் கௌரவிக்க பட்டனர் அதன் தொடர்ச்சியாக
ஊடக உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்கள் எனும் பிரிவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பு.கஜிந்தன் என்பவர் மனித உரிமைகள் சார் ஊடகவியலாளர் எனும் விருதினையும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கை சேர்ந்த பூ.லின்ரன் என்பவர் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதினையும் மற்றும் யாழ்பாணத்தை சேர்ந்த சுபேசன் என்பவர் சிறந்த ஆவணப்படுத்தல் ஊடகவியலாளர் என்ற விருதினையும் தமதாக்கி கொண்டு யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்
