பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் பருத்தித்துறை நகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.....!
பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் பருத்தித்துறை நகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.....!
இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் காலை 9:15 மணியளவில் ஆரம்பமானது 
இவ் அமர்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி அவர்களால் பருத்தித்துறை நகர் மைய பகுதியில் உள்ள பேரூந்து நிலையத்தில் பகல் நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பொலிசாரை கடமையில் நிறுத்துவது தொடர்பாகவும் மற்றும் அதற்கான கடிதத்தை தலமை பொலிஸ் உத்தியோகத்தர்க்கு அனுப்புவது தொடர்பாகவும் தீர்மானம் முன்மொழியப்பட்டதுடன் இவ் தீர்மானம் ஏக மனதுடன் நிறைவேற்றப்பட்டது 
அத்துடன் அண்மை காலங்களில் பருத்தித்துறை நகர பகுதியில் குறிப்பாக பருத்தித்துறை பேரூந்து தரிப்பிடத்தில் பகல் நேரத்தில் பல அநாகரிக செயற்பாடுகள் இடம்பெறுவதோடு சமூக விரோத செயற்பாடுகளும் இடம் பெறுவதாகவும் தெரிய வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்காகவே இவ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என ஜனநாயக போராளிகள் கட்சியின் நகர சபை உறுப்பினர் ஜெயகோபி கூறியுள்ளார்

 
 
 
 
 
 
 
 
 
 
