Breaking News

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் அருளுரை.!

 சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர் அருளுரை.!

 


யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடாத்தப்படுகின்ற. நிகழ்வாக மகாபாரதம் தொடர் சொற்பொழிவு இடம் பெற்றது.


சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆன்மீக அருளுரையாக மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் செஞ்சொற் செல்வர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்