பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 வீதியில் தடம் புரண்ட தண்ணீர் வண்டி.....!
பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 வீதியில் தடம் புரண்ட தண்ணீர் வண்டி.....!
பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் இன்று காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தண்ணீர் வண்டியின் சக்கரம் புறமாகவும் தண்ணீர் வண்டி புறமாகவும் தடம் புரண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான தண்ணீர் வண்டி காலை முதல் இயந்திர சக்கர கோளாறு காரணமாக இருந்ததுடன் அவ் வண்டியினை தண்ணீர் வண்டி சாரதி மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக கோளாருடன் இருந்த வண்டியை எடுத்து பருத்தித்துறை நகர பகுதி முழுவதும் கொண்டு சென்றுள்ளார்
இதன் தொடர்ச்சியாக பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதி வழியாக கொண்டு செல்லும் போது சக்கரம் முன்பாகவும் வண்டி புறமாகவும் சென்றுள்ளது
மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதி வழியாக வருகை தந்து இருந்தால் இவ் விபத்தினால் பாரியளவு உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் மற்றும் இச் சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் போது பேரூந்துகள் வீதி வழியாக வந்து இருந்தால் பாரியளவு விபத்துடன் உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கும் என பிரசேத மக்கள் தமது கருத்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான அலட்சிய போக்கை உடனடியாக நிறுத்தி அதற்கான நடவெடிக்கைகளை பருத்தித்துறை நகர சபை தவிசாளர் எடுக்க வேண்டும் என மக்கள் எதிர் பாக்கின்றனர்
