அல்வாய் எட்டாவது விளையாட்டு விழாவில் அல்வாய் மனோகரா உதைபந்தாட்டத்தில் வெற்றி..!
அல்வாய் எட்டாவது விளையாட்டு விழாவில் அல்வாய் மனோகரா உதைபந்தாட்டத்தில் வெற்றி..!
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் விளையாட்டுவிழாவில் அல்வாய் மனோகரா உதைபந்தாட்டத்தில் வெற்றியீட்டியுள்ளது.
அல்வாய் நண்பர்கள் மற்றும் அல்வாய் மனோகரா அணிகளுக்குப் இடையில் இறுதிப் போட்டி இன்று மாலை சந்தை மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் வடமராட்சி உதைபந்தாட்ட லீக் தலைவருமான மா.நவநீதமணி தலமையில்
இடம் பெற்றது.
இதில் முதல் போட்டியாக தேவைரையாளி யங்களன்ஸ் வதிரி டைமன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் தேவைரையாளி யங்களன்ஸ் 2 கோல்களையும், வதிரி டைமன்ஸ் ஒரு கோலையும் போட்ட நிலையில் தேவரையாளி யங்களன்ஸ் வெற்றியீட்டிய நிலையில் மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு அல்வாய் நண்பர்கள் மற்றும் அல்வாய் மனோகரா அணியும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய இறுதிப் போட்டி இடம் பெற்றது. இதில் அல்வாய் மனோகரா அணி நான்கு கோல்களையும்,
தேவரையாளி யங்களன்ஸ் இரண்டு கோல்களையும் போட்டது.
இதில் அல்வாய் மனோகர அணி வெற்றிக் கேடயத்தை தனதாக்கியது.
வடமராட்சிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 12 கழகங்களுக்கு இடையில் லீக் முறையில் இடம் பெற்ற போட்டிகளில் 17 வயதின் கீழ் பிரிவில் அல்வாய் யூத் எதிர் வதிரி டயமன்ஸ் மோதியது. இதில் அல்வாய் யூத் சம்பியனானது. 19 வயது கீழ்ப்பிரிவில் அல்வாய் யூத் எதிர் திருநாவலூர் அணிகள் மோதின இதில் அல்வாய் யூத் சம்பியனானது. 21 வயது பிரிவில் திக்கம் இளைஞர் எதிர் திருனாவலூர் அணி போட்டிக்கு தெரிவானது. திக்கம் இளைஞர் அணி கலந்துகொள்ளாமையால் திரிநாவலூர் அணி சம்பியனானது. 29 வயது பிரிவில் மாலை சந்தை மைக்கல் எதிர் திருநாவலூர் அணிகள் மோதின. இதில் மைக்கல் சம்பியனானது.
இதேவேளை பத்து ஓவர் கொண்ட துடுப்பாட்ட போட்டியில் அல்வாய் யூத் எதிர் மாலைசந்தை மைக்கல் விளையாட்டு கழகங்கள் மோதின. இதில் அல்வாய் யூத் சம்பியனானது.
35 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் அல்வாய் மனோகரா எதில் மாலை சந்தை மைக்கல் அணிகள் மோதின. இதில் மைக்கல் அணி சம்பியனானது.
இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டிகளில் திருநாவலூர் அணி எதிர் மைக்கல் அணிகள் மோதின. இதில் மாலைசந்தை மைக்கல் அணி சம்பியனானது. இடம் பெற்ற வலைப்பந்தாட்ட போட்டிகளில் திக்கம் அணியை எதிர்த்து அல்வாய் மனோகரா மோதியது. இதில் திக்கம் அணி சம்பியனானது. கயிறிழுத்தல் போட்டியில் ஆண்கள் பிரிவில் வதிரி டயமன்ஸ் எதிர் அல்வாய் யூத் மோதின. இதில் வதிரி டயமன்ஸ் சம்பியனானது. பெண்கள் கயிறிழுத்தல் போட்டியில் திக்கம் அணியை எதிர்த்து அல்வாய் நக்கீரன் அணி மோதியது. இதில் திக்கம் இளைஞர் அணி சம்பியனானது. .
வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசில்கள், பதக்கங்கள் கேடையங்களை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமராட்சி லீக் தலைவரும் நிகழ்வின் தலைவருமான நவநீதமணி, சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட வட மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் பாலன் முகுந்தன், வடமராட்சி லீக் செயலாளர் பா.முகுந்தன், இலங்கை உதை பந்தாட்ட வீரர் த.கஜகோபன், வடமராட்சி நடுவர் சங்க தலைவர் வக.மனோராஜ், கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்ட இலங்கை உதை பந்தாட்ட சம்மேளன முன்னாள் உதவிப் பொது முகாமையாளர் அ.அருளானந்தசோதி, அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபர் கி.சிறிகாந்தராசா பிரித்தானியா வர்த்தகர் தங்கவேலாயுதம் சிவகுமார், அல்வாய் இந்து வாலிபர் சங்க தலைவர் த.சிவனேஸ்வரன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.
போட்டிகளை கண்டுகளிக்க வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட கழக வீரர்கள், உதைபந்தாட்ட விரும்பிகள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்துகொண்டிரு
ந்தனர்.
