பலத்த போட்டியின் மத்தியில் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர்களுக்கான உதைபந்தாட்ட தொடர்....!
பலத்த போட்டியின் மத்தியில் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர்களுக்கான உதைபந்தாட்ட தொடர்....!
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம் தோறும் நடத்தும் உதைபந்தாட்ட தொடரின் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளனத்திற்கு உட்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான உதைபந்தாட்ட தொடர் இன்றைய தினம் (31) வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் காலை 9 மணியளவில் ஆரம்பமானது
இவ் பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்று போட்டியில் மனற்காடு இளைஞர் அணியானது எந்த அணியும் பங்கு கொள்ளத காரணத்தால் நேரடியாகவே மாவட்ட ரீதியில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட சுற்று போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளது
மற்றும் ஆண்களுக்கான உதைபந்தாட்ட தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று யாழ் மாவட்ட ரீதியில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட சுற்று போட்டியில் பங்கு கொள்ள உள்ள வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட வேண்டிய நிலை காணப்பட்டதுடன் சிறப்பாக விளையாடிய வீரர்களை அணைத்து அணிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டனர்
இவ் சுற்று போட்டியினை பார்வையிடுவதற்கு வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இருந்து இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்