சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து!
சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து!
சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் திருமதி துவாரகா ஜெயகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
சபையின் மாதாந்த அமர்வு இன்று (23) சபையின் சுழிபுரத்தில் உள்ள சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இவ்விடையம் குறித்து சபையில் முன்மொழிவொன்றை சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் -
இப்பகுதியில் நீர் வழிந்தோட வடிகால் இருந்தும் உரிய திட்டமிடலோ முறையான பொறிமுறையோ இல்லாது அமைக்கப்பட்டுள்ள வடிகாலால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஏற்படும் வெள்ள நீரால் பாதிக்கப்படும் தமது இயல்வு வாழ்வை சீரமைத்துக்கொள்ள முயற்சிக்கும் சங்கானை கிழக்கு J/ 178 தானாவோடை கிராமத்தின் வெள்ள நீர் தேங்கலால் ஏற்படும் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக்காண பொறிமுறை ஒன்றை வகுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்கப்பது அவடியம் .
குறிப்பாக J/178 சங்கானை கிழக்கு, தானாவோடை கிராமத்தில் தற்போது நிரந்தர காணிகளை கொண்டு வாழும் மக்கள் 1990 களில் காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்து நீதிவான் முகாமில் தற்காலிகமாக வாழ்ந்த மக்களாகவே இருக்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் சுமார் 85 குடும்பங்களை கொண்ட இந்த மக்கள் தற்போது சங்கானை முருகமூர்தர்தி கோயில் அருகாமையில் உள்ள விவசாயக் காணிகளை தமது சொந்த முயற்சியில் கொள்வனவு செய்து தமக்கான நிரந்தர வாழ்வியலை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த மக்கள் தற்போது தமது வாழிடமாக குடியேறியுள்ள காணிகள் விவசாயக் காணிகளாக இருப்பதனால் வருடாவருடம் பெய்யும் மழை நீரால் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்த மக்களுக்கு வருடாவருடம் அனர்த்த உதவி திட்டங்கள் வழங்க வேண்டிய நிலையும் அரசு மற்றும் தனியாருக்கு ஏற்பட்டுவருகின்றது.
இப்பகுதியில் நீர் வழிந்தோடுவதற்கு ஏற்றவகையில் வடிகால் ஒன்று உருவாக்கப்பட்டு வழுக்கையாற்றுடன் சங்கமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போதும் அதனூடாக செல்லும் மழை நீர் முழுமையாக கடலை சென்றடைவதற்கான பொறிமுறையை கொண்டதாக அந்த வாய்க்கால் இல்லாமையே மழை நீர் மக்கள் வாழிடத்தில் நிரம்பி இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்க காரணமாக இருக்கின்றது.
மக்களின் வாழ்வியலை முதன்மைப்படுத்தும் சபையாக எமது சபையின் செயற்பாடுகள் இருப்பதனால் இந்த மக்களின் வாழ்வியல் நலன்களை கருதிற்கொண்டு வந்து சேரும் மழை நீரை வடிந்தோடச் செய்வதற்காக வடக்கின் பெரிய ஆறு என கூறப்படும் வழுக்கையாற்றின் எல்லைவரை நீட்டிக்கப்பட்டுள்ள இப்பகுதியூடாகச் செல்லும் வாய்க்காலை தூர்வாரி, ஆழப்படுத்தி அதன் இரு பகுதிகளையும் வழிந்தோடும் நீரால் பாதிப்புறாத வகையில் நிலையான திட்டமிடலுடன் புனரமைத்து கொடுக்க எமது சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் சார்பாக எனது கோரிக்கை அமைகின்றது.
அந்தவகையில் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள மழைகாலத்திற்கு முன்னர் குறித்த பகுதி மக்களின் இயல்பான வாழ்வியலை கருத்திற்கொண்டு குறித்த வாய்க்காலை சீரமைக்க எமது சபை முதன்மைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதக்கது
குறித்த கோரிக்கையின் அவசியம் கருதி குறித்த நீர் வாய்க்காலின் தூர்வாரலை துறைசார் ஆலோசனை பெற்று தீர்வுகாண சபை அனுமதி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.