Breaking News

யாழில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய NPP ஆதரவாளர்கள்!

 

யாழில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய NPP ஆதரவாளர்கள்!



தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை  NPP கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று  தாக்கிய சம்பவம் ஒன்று வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது.

இன்று நாடு  நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தின் கள நிலைவரங்களை செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுட்டுக் கொண்டிருந்த வேளை வேலணை துறையூர் ஐயனார் வித்திதாலய வாக்காளர் மையத்தின் அருகே NPP யின் ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்த சம்பவத்தை வீடியோ செய்தியாக சேகரித்துக் கொண்டிருந்த போதே குறித்த NPP குழு  ஊடகவியலாளரை தாக்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரால் ஊர்காவற்றுறை பொலிசில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.