Breaking News

மனதின் ஆழத்தில் இருந்து “நன்றி” சொல்கிறார் -சட்டத்தரணி றியாஸ் ஆதம்

 மனதின் ஆழத்தில் இருந்து  “நன்றி” சொல்கிறார் -சட்டத்தரணி றியாஸ் ஆதம்





நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எனக்கு கிடைத்த வெற்றி எனது தனிப்பட்ட வெற்றியல்ல, இது மக்களின் நம்பிக்கையினால் ஏற்பட்ட வெற்றியாகும்.


இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ள சட்டத்தரணி ஏ எல் றியாஸ் ஆதம் தெரிவித்துள்ளார் 


இதோடாக அவர் விடுத்துள்ள பதிவில்.,


உங்கள் வாக்கின் பெறுமதியை விளங்கி நீங்கள் எனக்களித்த பொறுப்பு என்பதை நான் உணர்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன், இன்ஷா அல்லாஹ் அதை நியாயமாகவும், நேர்மையாகவும் நிறைவேற்ற முயற்சிக்கின்றேன்.


நான் வென்றது என் மீது உங்களுக்கு இருக்கக் கூடிய நம்பிக்கையை உணர்த்துகிறது. நான் செய்கிற ஒவ்வொரு செயலிலும், அந்த நம்பிக்கையை காக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.


இந்த வெற்றியை, அல்லாஹ்வுக்கே அர்ப்பணிக்கிறேன். உங்களையும், என்னையும், நம் ஊரையும் அல்லாஹ் நல்ல வழியில் நடத்துவானாக!


“வெற்றி நம்முடையது அல்ல - இந்த வெற்றி நியாயத்திற்கானது” என குறிப்பிட்டுள்ளார்