தொடர் விசாரனை அழுத்தத்திற்கு உள்ளாகும் இளைஞன்......!
தொடர் விசாரனை அழுத்தத்திற்கு உள்ளாகும் இளைஞன்......!
கிளிநொச்சியினை சேர்ந்த சுயாதீனமான ஊடகவியலாளரான P.thamiliniyan எனும் இளைஞர் தற்போது தொடர் விசாரனை அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
குறித்த இளைஞன் பாடசாலை காலங்களில் கல்வி கற்கும் போது தமிழர் கடந்து வந்த பாதைகள் மற்றும் ஈழத்தமிழரின் வரலாறுகள் சம்மந்தமாக பல்வேறு பட்ட ஆவணங்கள் திரட்டி முக்கிய ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்
இதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் நேரடியாக தொடர்பு பட்டமையின் தொடர்ச்சியாக தொடர் விசாரணை அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிய வந்துள்ளது
குறித்த இளைஞன் தனது உயதர பரிட்சையின் பின் சில ஊடகங்களுக்கு செய்தி சேகரித்து கொடுத்து உள்ளதாகவும் நடை பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஊர்காவற்துறை பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற போது ஆளும் தரப்பால் எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது
அதனை தொடர்ந்து எச்சரிக்கை ஊட்டப்பட்ட தரப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் குறித்த இளைஞனை பல்வேறு பட்ட தரப்புக்களில் இருந்து மிரட்டல்கள் வருவதாகவும்
ஊடக அடையாள அட்டை இன்றி பல்வேறு பட்ட ஆவணங்கள் கட்டுரைகளை பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டதால் பல்வேறு பட்ட விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிய வருகிறது

