Breaking News

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்காக சந்நிதியான் ஆச்சிரமத்தில் பிரார்த்தனை..!

 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்காக சந்நிதியான் ஆச்சிரமத்தில்  பிரார்த்தனை..!


 



01.05.2025 நேற்றைய முன் தினம்  இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்காக சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்றைய தினம் விசேட பிரார்த்தனை நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.


இதில் பலரும் இறைபதம் அடைந்த நல்லது ஆதீன குரு முதல்வருக்கு இறை ஆசி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில்  வாராந்த இடம் பெறும்  நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில்,இடம் பெற்றது. 

 இதில் ஆன்மீக அருளுரையாக  “ஈழத்தில் சைவம்” என்ற தலைப்பில்,

பொது சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஐ் அருளுரை நிகழ்த்தினார்.


உதவியாக சங்கானை மருத்துவமனைக்கான மருத்துவ பணியாளர் ஒருவருக்கான மாதாந்த கொடுப்பனவாக ரூபா 70000/- மும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  செல்வச்சந்நிதி  முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரை செல்லும் அடியவர்களுக்கு  நேற்று வியாழக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தி்ல் விசேட பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு காலை  ஆகாரமும்  ஒரு தொகை நிதியும் வழங்கப்பட்டு ஆச்சிரம சுவாமிகளது ஆசியுடன் யாத்திரைக்கு வழியனுப்பப்பட்டனர். குறித்த யாத்திரை 46 தினங்கள் 815 கிலோமீற்றர் தூரம் கதிர்காமம் வரை சென்றடையும்.