கொடிகாமம் மந்துவில் பகுதியில் துப்பாக்கி சூடு..!
கொடிகாமம் மந்துவில் பகுதியில் துப்பாக்கி சூடு..!
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்துவில் பகுதியில் வைத்து 20/05 செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வானத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
டிப்பர் வாகனம் ஒன்று பளைப் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் நோக்கி வந்துள்ளது.இதன்போது எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையில் நின்றிருந்த பொலிஸார் வாகனத்தை மறித்த போது பொலிஸாரின் சைகையை மீறி வாகனம் பயணித்துள்ளது. அதன் பின்னர் மேலதிக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மிருசுவில் பகுதியில் டிப்பர் வாகனத்தை மறித்த போதிலும் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில் பொலிஸ் வாகனத்தில் பின்தொடர்ந்த பொலிஸார் மந்துவில் பகுதியில் வைத்து வாகனச் சக்கரங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வாகனத்தை நிறுத்தியுள்ளனர் .
இருப்பினும் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பித்துள்ள நிலையில் பொலிஸார் டிப்பர் வாகனத்தைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.