Breaking News

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு.!

 அம்பாறை மாவட்டத்தில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.



கல்முனை – பாண்டிருப்பு, செல்லப்பா வீதி, பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றிவேல் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

ADVERTISEMENT

கடந்த திங்கட்கிழமை (31) மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், தனது கணவரை காணவில்லை என அவரது மனைவி நேற்று (01) காலை இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததையடுத்து காணாமல் போன மீனவரின் நண்பரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று (01) பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று நண்பகல் மீட்கப்பட்டது.

அத்துடன், மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.