முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினுடைய ஆய்வு பணிகள் ஆரம்பம்...
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினுடைய ஆய்வு பணிகள் ஆரம்பம்...
தற்போதைய அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக நிர்மாணிக்கப்படவுள்ள முல்லைத்தீவு - பரந்தன் சாலையில் உள்ள வட்டுவாகல் பாலத்தின் ஆய்வுப் பணியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றையதினம் (22) கலந்து கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், கொள்முதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். கொள்முதல் செயல்முறை முடிந்ததும் பாலத்தின் பணிகள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பாலம் கட்டுவதற்கான மொத்த மதிப்பீடு ரூ. 1900 மில்லியன் ஆகவும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக ரூ 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதகமான வானிலை காரணமாக சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவதிப்படும் மக்களுக்கு இது சிறந்த வசதியாக அமையும்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.