வேட்பாளர்களின் விபரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் முறைமை தேர்தல் ஆணையத்தினால் அறிமுகம்.
வேட்பாளர்களின் விபரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் முறைமை தேர்தல் ஆணையத்தினால் அறிமுகம்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களைப் பெறுவதற்காக, வாக்காளர்களுக்காக இலங்கை தேர்தல் ஆணையம் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் வலைத்தளமான https://eservices.elections.gov.lk மூலமோ அல்லது QR குறியீட்டின் மூலமோ விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும்
வலைத்தளத்தைப் பார்வையிடுபவர்கள் அதில் உள்ள 'குடிமக்களுக்காக' என்பதனை கிளிக் செய்து, பின்னர் பக்கத்தின் கீழே உள்ள 'உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்' (KYC) பகுதிக்குச் சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளமானது வாக்களருடைய பகுதியின் வேட்பாளர்கள் அவர்கள் தொடர்பான கட்சி அல்லது சுயேச்சைக் குழு மற்றும் உள்ளூர் அதிகார சபைகளுக்கான விவரங்களை தெளிவாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளாட்சித் தேர்தலானது
மே 06 நடைபெற உள்ளது.