ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது
ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று(2) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த படகுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்