ஆதாரங்களுடன் தகவல் தாருங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும்!” – பிரதி பொலிஸ் மா அதிபர் பகிரங்க அறிவிப்பு...!
🔴 ஆதாரங்களுடன் தகவல் தாருங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும்!” – பிரதி பொலிஸ் மா அதிபர் பகிரங்க அறிவிப்பு...!
🚨 “போலீஸ் நிலையத்தில் பந்தம் கொடுத்துத்தான் காரியம் முடிக்க வேண்டும் என்ற நிலை இனி தொடரக்கூடாது!”
எஸ் ஜே புஹாது
“அநியாயத்திற்கு நியாயம் தேடி போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது காரியத்தை முடிப்பதற்காக போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு பந்தம் கொடுக்க வேண்டிய நிலைமை இனிமேலும் தொடரக்கூடாது.”
இவ்வாறு அம்பாறை மாவட்ட பிரதி போலீஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் குழு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் திருப்தியடையாத வகையில் பணியாற்றும் போலீஸ் உத்தியோகத்தர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்த அவர், தமிழ் மொழி தெரிந்த போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சில விடயங்களில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், பொதுமக்களிடம் ‘பந்தம்’ அல்லது பணம் கோரும் போலீஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் வீடியோ அல்லது புகைப்படங்களை வழங்கினால், அவை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி போலீஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல தெரிவித்தார்.
