யாழில். அறநெறி பாடசாலையின் "முத்தமிழ் முற்றம்"..!
யாழில். அறநெறி பாடசாலையின் "முத்தமிழ் முற்றம்"..!
மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் அறநெறி பாடசாலையின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும் அறநெறி மாணவர்களின் "முத்தமிழ் முற்றம்" கலை நிகழ்வும் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு புவனஸ்வரி அம்பாள் ஆலய முன்றலில் அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர் மு.இராஜவரோதயம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரபா செல்வரூபனும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அ.பரஞ்சோதியும் கௌரவ விருந்தினர்களாக வ.திருஞானசம்பந்தர் மற்றும் விமலாதேவி குகதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் அறநெறி மாணவர்களின் தெய்வீக இசை, பரத நாட்டியம் , "எண்ணப்பறவைகளாய் விண்ணில் பறந்திடுவோம்" எனும் தலைப்பிலான கவியரங்கம், வயலின் இசை ,காவடி ,பட்டிமன்றம், காத்தவராயன் சிந்துநடைக்கூத்து என்பன இடம்பெற்றன.
இந்நிபழ்வில் அறநெறி மாணவர்கள்,பெற்றோர்கள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
