மிக சிறப்பாக இடம்பெற்றது சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளி விளையாட்டு விழா.....!
மிக சிறப்பாக இடம்பெற்றது சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளி விளையாட்டு விழா.....!
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் முன்பள்ளி விளையாட்டு விழா இன்றைய தினம் மாலை 4 மணிக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமானது
இவ் விளையாட்டு விழாவில் சிறுவர்களின் இசையும் அசையும் நிகழ்வு சிறு ஓட்டங்கள் பெற்றோர்கள் நிகழ்வு விருந்தினர் நிகழ்வு என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றன
இவ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக செம்பியன் பற்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் அதிபர் பகிதர குமார் சிறப்பு விருந்தினராக திரு ஜோ.ராசகுமார் சமுர்த்தி உத்தியோகத்தர் குறிஞ்சி குமரன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் விருந்தினராக அயல் முன்பள்ளி ஆசிரியர்கள் செம்பியன் பற்று வடக்கு கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
