Breaking News

சிறையில் உள்ள பிக்குகளின் மத உரிமையை பாதுகாக்குமாறு பிக்குகள் நடைபயணம் ஆரம்பம்.

 🚨சிறையில் உள்ள பிக்குகளின் மத உரிமையை பாதுகாக்குமாறு பிக்குகள் நடைபயணம் ஆரம்பம்.



சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகோட அத்தே ஞானசார தேரர் மற்றும் பிற பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி, மகா சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'துறவறத்திற்கான நீதி – தேசிய உறுதிப்பாட்டு பூஜை' மற்றும் 'சுதந்திர நடைப்பயணம்' ஆகியவை இன்று காலை (10) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையின் முன்பாகத் தொடங்கியது.


இந்தப் போராட்டப் பேரணி, ஒக்டோபர் 15 ஆம் திகதி கொழும்பை சென்றடைவதற்கு முன்னர், பல்வேறு முக்கிய நகரங்கள் வழியாகச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இன்று (10) கண்டியில் இருந்து கடுகன்னாவ வரையும், 11 ஆம் திகதி கடுகன்னாவ - கேகாலை வரையும், 12 ஆம் திகதி கேகாலை - வரகாபொலவும், 13 ஆம் திகதி வரகாபொல - நிட்டம்புவவும், 14 ஆம் திகதி நிட்டம்புவ - கடவத்தை, ஒக்டோபர் 15 ஆம் திகதி கடவத்தை - கொழும்பு வரையும் நடைபயணம் மேற்கொள்ளப்படும்.


சிறையில் அடைக்கப்பட்ட பிக்குகள் தொடர்பான சட்டம் மற்றும் காவி உடை களையப்பட்டதாகப் பதிவான சம்பவங்கள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறுகோரி மகா சங்கம் இந்தப் போராட்டத்தையும் மத அனுசரிப்பையும் தொடங்கியுள்ளது.