Breaking News

அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனரும், சட்டத்தரணியும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான சிஅ.ஜோதிலிங்கம் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார்

 அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனரும்,  சட்டத்தரணியும்,  ஓய்வு பெற்ற ஆசிரியருமான சிஅ.ஜோதிலிங்கம் அவர்கள் சிகிச்சை பலனின்றி  காலமானார் 




இவருக்கு 8/10/2026 காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை  பித்தப்பைக்கு அருகாமையில் இருந்த கட்டி ஒன்றை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவரை விசேடமாக  கவனிப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு  மாற்றப்பட்டிருந்த நிலையில்  அங்கு அவர் சாவடைந்திருக்கின்றார்.

 அவர் தனது 16 வயதிலிருந்து இ பி ஆர் எல் எப் இயக்கத்தில் அரசியல் பிரிவில் இணைந்து நீண்ட காலம் செயற்பட்ட வந்திருந்த நிலையில் அதிலிருந்து விலகி கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றார்.

 இளங்கலைமானி முதுகலை மானே சட்டை சட்டத்தரணி உட்பட பல பட்டங்களை பெற்று அரசியல் ஆய்வாளராக மிக நீண்ட காலம் பல அரசியல் ஆய்வு கட்டுரைகளை எழுதியதுடன் பல புத்தகங்களையும் எழுதி கொண்டிருந்தார். 

 


தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும்  அரசியல் ஆலோசகராகவும்,  பல தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் ஆலோசகராக மட்டுமின்றி மலையக அரசியல் கட்சிகளுக்கும். அரசியல் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.


 சிறிது காலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியவுடன் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்கின்ற அவரால் தொடங்கப்பட்ட அமைப்பினால் அரச அறிவியல் கல்லூரி ஒன்று உருவாக்கப்பட்டு சுமார் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசரவியல் கல்வியை நிறைவு செய்திருந்தார்கள். தொடர்ச்சியாக தமிழ் அரசியல் பரப்பிலே ஒரு அரசியல் ஆய்வாளராக மட்டுமின்றி ஒரு அரசியல் போராளியாகவும் ஒரு ஒருங்கிணைந்த ஒரு தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டுற்கு பின்னர்  தனது கோரிக்கையாக அரசியல்,  சமூக, சிவில்,  செயற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை முன்வைத்துக்கொண்டிருந்தார். இவ்வாறு தமிழ் மக்களுக்காக பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வந்தார்.


 நிலையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கட்டிய காரணமாக நேற்றைய தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர்  தீவிர கவனிப்பு பிரிவில் வைத்து கவனித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வேறு சுகயீனம்  காரணமாக  மரணமடைந்திருப்பது பேரிழப்பாகும்.