Breaking News

உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்..!

 உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்..!


யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கின்ற விவகாரத்தில் ஆளும்கட்சிக்குள்ளேயே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.


குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் விளையாட்டரங்கு அமைக்கும் பணிகள் எந்தக் கட்டத்தில் இருப்பதாகவும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்யப் போகிறீர்கள் என கூட்டத்தை தலைமை தாங்கி நடாத்திய அமைச்சர் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.


இதன் போது குறுக்கிட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாரும் எதிர்பாரத வகையில் இந்த விளையாட்டரங்கு அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்தது முதல் இதற்கான அனுமதியை யார் வழங்கியது எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.


இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் விளங்காமல் கதைக்க கூடாது என்றும் கொஞ்சம் இருங்க தம்பி என்றும் நான் சொல்வதை கேளுங்கள் என உரைத்த தொனியில் பேசியிருந்தார்.


இதன் போது மீளவும் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா, இளங்குமரன், ரஜீவன் ஆகிய மூவரும் மாறி மாறி இதற்கான அனுமதி பெறப்பட்டதா? இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி இன்னமும் இங்கே இருப்பதாகவும் அடுத்த கட்டம் என்ன என்ற தொனியில் பேசியிருந்தனர்.


எனினும் இந்த விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்து பேசுவதைத் தவிர்த்த அமைச்சர் சபையில் அடுத்த விடயத்தை எடுத்து கூட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.