Breaking News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, தாம் கைது செய்யப்படலாம் எனத் தெரிவித்து, முன்பிணை கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, தாம் கைது செய்யப்படலாம் எனத் தெரிவித்து, முன்பிணை கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.



வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் அவர், இலங்கைக்குத் திரும்பும் போது வானூர்தி  நிலையத்தில் கைது செய்யப்படக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளார்.


எனவே, எந்தவொரு நிபந்தனையின் கீழும் தமக்கு முன்பிணை வழங்குமாறு சிரந்தி ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.


நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#ShiranthiRajapaksa #FCID #AnticipatoryBail #sooriyannews #Srilanka #TruthAtAllCosts