BREAKING NEWS | அனோஜன் சிவரசாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பை ரத்து செய்தது சவூதி உச்ச நீதிமன்றம்..!
🚨 BREAKING NEWS | அனோஜன் சிவரசாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பை ரத்து செய்தது சவூதி உச்ச நீதிமன்றம்..!
🇱🇰🤝🇸🇦 இலங்கையின் இராஜதந்திர முயற்சிக்குக் கிடைத்த முக்கிய திருப்பம்..!
எஸ் ஜே புஹாது
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவரசாவின் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
📢 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி, அனோஜன் சிவரசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
💥 தொடர்ச்சியான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள்; தீவிரமான சட்ட நடவடிக்கைகள் — பலனளித்ததா இலங்கையின் முயற்சி..?
அனோஜன் சிவரசாவின் வழக்கில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட முயற்சிகளின் விளைவாகவே இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும், இலங்கைத் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுக்களுக்கும் இலங்கை மக்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு குடும்பத்தின் கண்ணீருக்கு நம்பிக்கைக் ஒளிக் கீற்று பிரகாசிக்க தொடங்கியுள்ளது. இது ஒரு இலங்கைப் பிரஜைக்காக முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர முயற்சியில் முக்கிய திருப்பமாக கருத வேண்டியுள்ளது.
#AnojanSivarasa #SriLanka #SaudiArabia #BreakingNews #அனோஜன்_சிவரசா #இராஜதந்திர_வெற்றி
