Breaking News

யாழ். பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் தயாளினி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்...!! – நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்..! மகள் – மருமகன் மீண்டும் மன்றில்; அடுத்த தவணையில் குற்றப்பத்திரிகை வாசிப்பு

 யாழ். பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் தயாளினி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்...!!


– நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!


மகள் – மருமகன் மீண்டும் மன்றில்; 


அடுத்த தவணையில் குற்றப்பத்திரிகை வாசிப்பு


எஸ் ஜே புஹாது 



யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் நேற்று (06) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.


கடந்த மார்ச் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் தயாளினியின் சடலம், மார்ச் 21ஆம் திகதி தனக்கிளப்பு காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.


சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


இதன்போது, பொலிஸார் தரப்பில் குற்றப்பத்திரிகை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.


குற்றப்பத்திரிகை அடுத்த வழக்கு தவணையில் சந்தேகநபர்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்படும் என தெரிவித்த நீதிமன்றம், அதன் பின்னர் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம்பெறும் என அறிவித்தது.


இதனையடுத்து வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை வழக்கில் மகள் – மருமகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.