Breaking News

சிக்மா‘ திரைப்படத்தில் பணியாற்றிய நம்மவர் கபி!

 ‘சிக்மா‘ திரைப்படத்தில் பணியாற்றிய நம்மவர் கபி!



யாழ்ப்பாணம் - மீசாலையைத் தாயகமாகக் கொண்ட கலைஞர் கபி, தமிழக முதலமைச்சரும் நடிகருமான ‘தளபதி‘ விஜய் இன் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியுள்ள “SIGMA” திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருப்பதாக அறிய முடிகின்றது. 🎥✨


அவுஸ்ரேலியாவில் இருக்கும் இவர், சிறு வயது முதலே சினிமா மீது கொண்ட ஈடுபாட்டால், தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் இணைந்து குறும்படங்களை உருவாக்கத் தொடங்கியதுடன், பல்வேறு திரைத்துறை சார் பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.


இயக்குனராகும் கனவுடன் சென்னைக்கு சென்ற அவர் இயக்குர் S.U.அருண்குமார் இயக்கிய ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் direction team-ல் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.


தொடர்ந்து ஜேசன் சஞ்ஜய் இயக்கிய ‘சிக்மா‘ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 


இயக்குநராகும் அவரது பெருங்கனவு வெற்றி பெற வாழ்த்துகின்றோம்!