Breaking News

பாரதி கிண்ணத்தைத் தனதாக்கியது கொடுக்குளாய் சக்திவேல் B அணி!




பாரதி கிண்ணத்தைத் தனதாக்கியது கொடுக்குளாய் சக்திவேல் B அணி!



வடமராட்சி கிழக்கு – பாரதி விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் நடத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில், கொடுக்குளாய் சக்திவேல் B அணியினர் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று பாரதி கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டனர்.


குறித்த சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு இன்று (09) மாலை 3.30 மணியளவில் பாரதி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், அந்த லீக்கில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்று வந்தது.


இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து, கொடுக்குளாய் சக்திவேல் B அணியினர் களமிறங்கினர்.


விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் சக்திவேல் B அணியினர் ஒரு கோலைப் பதிவு செய்து முன்னிலை பெற்றனர்.


தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் எதனையும் பதிவு செய்யவில்லை.


இதனையடுத்து, ஆட்டம் நிறைவில் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற கொடுக்குளாய் சக்திவேல் B அணியினர், இவ்வாண்டுக்கான பாரதி கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டனர்.