Breaking News

45ஆவது இளைஞர் விருதுப் போட்டி - யாழ்ப்பாணம்

 செய்தி


 45ஆவது இளைஞர் விருதுப் போட்டி - யாழ்ப்பாணம் 



தேசிய ரீதியில் இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இளைஞர் விருதுப் போட்டியின் 45ஆவது நிகழ்வு, யாழ்ப்பாணம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக மாவட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் இன்று (04.10.2026) காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பல இளம் கலைஞர்கள் கலந்து கொண்டு தமது பல்வேறு கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.


பல்வேறு கலைப் பிரிவுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்களை நடுவர்கள் மதிப்பீடு செய்ததுடன், சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


-வேணுஜா ஜோசப்