10 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் மலையக ரயில் சேவை
10 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் மலையக ரயில் சேவை
மலையக ரயில் பாதையில் இன்று (02) முதல் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்ததாவது, கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
டிட்வா (Ditwah) சூறாவளியின் தாக்கத்திற்குப் பின்னர், சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மலையக ரயில் பாதையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
