நாளை அதிகாலை 1 மணிமுதல் சங்குபிட்டி பாலம் ஊடாக பயணிக்க முடியும்..!
நாளை அதிகாலை 1 மணிமுதல் சங்குபிட்டி பாலம் ஊடாக பயணிக்க முடியும்..!
நாவற்குழி - கேரதீவு - மன்னார் (A32) வீதியிலுள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் அவசர திருத்த வேலைகள் பலத்த சிரமத்தின் மத்தியில் நிறைவுற்றதால் நாளை 12.10.2026 அதிகாலை 1.00 மணியிலிருந்து இப் பாலத்தினூடான அனைத்து விதமான போக்குவரத்தும் வழமை போல் மேற்கொள்ள முடியும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
நிறைவேற்றுப் பொறியியலாளர்,
வீதி அபிவிருத்தி அதிகார சபை,
கிளிநொச்சி
