மொனராகலை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவனைப் பாலியல் மோசடிக்கு உட்படுத்திய ஆசிரியை ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறை
மொனராகலை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவனைப் பாலியல் மோசடிக்கு உட்படுத்திய ஆசிரியை ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறை
14 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை - 49 வயது ஆசிரியைக்கு சிறை தண்டனை! நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பரபரப்பு!
💥பாடசாலை மாணவன் ஒருவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் இழைத்த வழக்கில் 49 வயதான ஆசிரியை ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
💥நடந்தது என்ன?
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, ஹிதிகிபுல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயது ஆசிரியை, தனது 14 வயது மாணவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டது.
💥நீதிமன்றத்தில் அரங்கேறிய நாடகம்....
38 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், அவர் குணமடைந்ததும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
💥அதிரடித் தீர்ப்பு...
வழக்கை விசாரித்த மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சினிக் விஜேசேகர, ஆசிரியையை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பளித்தார்..
💥சிறைத்தண்டனை...
3 குற்றச்சாட்டுகளுக்கு தலா 8 ஆண்டுகள் வீதம் மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இவற்றை ஒரே காலத்தில் அனுபவிக்கும் வகையில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக நீதிபதி குறைத்தார்.
🔥நஷ்டஈடு....
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மொத்தம் 7,50,000 ரூபாய் (3 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 2.5 லட்சம்) நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதைச் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
🔥அபராதம்....
50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு இலகு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
💥மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியையே இதுபோன்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
