Breaking News

மன்னார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவு நிர்மாணம்: ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!

 மன்னார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவு நிர்மாணம்: ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!


....



மன்னார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவு நிர்மாணம்: ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!

மன்னார் மாவட்டப் பொது மருத்துவமனையில் 600 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (செப்டம்பர் 16) ஆரம்பித்து வைக்கப்பட்டன. 


இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவடையவுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, "மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும், கொழும்பு போன்ற தூரத்து நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


 மேலும், மன்னார் மருத்துவமனைக்கு 250 மில்லியன் ரூபாய் செலவில் CT ஸ்கேனர் இயந்திரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வழங்கப்படுவதுடன், 243 மில்லியன் ரூபாயில் மருத்துவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களும், 230 மில்லியன் ரூபாயில் சிறுவர்கள் பிரிவும் நிர்மாணிக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில், "இலங்கையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை இந்தியா ஒரு குடும்ப உறுப்பினருக்கான கடமையாகவே கருதுகிறது" எனக் குறிப்பிட்டார். வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.