Breaking News

பாடசாலை மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'சுரக்சா' மாணவர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், எய்ட்ஸ் பரிசோதனைக்கான செலவுகளையும் வழங்குவதற்கு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக மாகாணக் கல்வி அதிகாரிகள், பிரிவேனாக்களின் தலைவர்கள் மற்றும் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை அதிபர்களுக்குச் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் பரிசோதனைச் செலவுகள் தவிர ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis), ஹெபடைடிஸ் (Hepatitis), தோல் புற்றுநோய், புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளுக்கான செலவுகளும் இந்த புதிய சுற்றறிக்கையின் கீழ் ஈடுசெய்யப்படும்.

இதனிடையே, கடந்த ஆண்டில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 107 நபர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#sooriyannews #Srilanka #TruthAtAllCosts #AIDS #suraksha