Breaking News

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்த தி பாரடைஸ் திரைப்படம் கடந்த 24 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

 இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்த தி பாரடைஸ் திரைப்படம் கடந்த 24 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.



இந்த திரைப்படத்தின் முதல் நாள் ரூ. 88 கோடியை வசூலித்துள்ளது.


இந்த நிலையில், நடிகர் நானி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், ”உங்களுடைய அனைத்து கருத்துகளையும் பார்த்தேன். நீங்கள் காட்டிய அன்பையும், ரசித்துச் செய்த நகைச்சுவையான கிண்டல்களையும் மிகவும் ரசித்தேன். பார்வையாளர்கள் இந்தப் படத்தைத் தங்களுடைய படமாக ஏற்றுக்கொண்ட விதம் என் மனதை நெகிழச் செய்தது.


அதேபோல், விமர்சகர்களும் விமர்சனங்களை முன்வைத்தவர்களும் சுட்டிக்காட்டிய குறைகளிலிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.


எல்லாவற்றிற்கும் நன்றி என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. உங்களுக்கு ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில், மிகுந்த உழைப்புடனும், ரத்தம் மற்றும் வியர்வையுடனும் தி பாரடைஸ் படத்தை உருவாக்கியுள்ளோம்.


இனி இந்தப் படம் உங்களுடையது. அதை நீங்கள் கொண்டாடலாம், விமர்சிக்கலாம், தீர்ப்பளிக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.


#Nani #Theparadise #celebrated #criticized #sooriyannews #Srilanka #TruthAtAllCosts