Breaking News

ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!

 ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!



20 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இன்று (21) நடைபெற்ற குத்துச்சண்டை முதற்கட்ட போட்டியொன்றில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.


ஆண்களுக்கான 70 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய லஹிரு சந்திரபண்டார, யேமன் வீரரை 4-1 என்ற சுற்றுகள் கணக்கில் தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.


இருப்பினும், இன்று நடைபெற்ற ஏனைய போட்டி நிகழ்வுகளில் இலங்கைக்கு எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


#Sooriyannews #srilanka #TruthAtAllCosts #india #newsupdate #September2026 #BreakingNews #LatestNews