முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவிற்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு: பிணையில் விடுதலை ...
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவிற்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு: பிணையில் விடுதலை
...
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிரதிவாதியான லக்ஷ்மன் யாப்பாவிற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சரின் லஞ்ச விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
