பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் மீள ஆரம்பம்: விடுதி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ...............
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் மீள ஆரம்பம்: விடுதி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
...............
சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது வானிலை சீரடைந்து வருவதைத் தொடர்ந்து, அனைத்துப் பீடங்களின் கல்விச் செயற்பாடுகளையும் வழமை போல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
