வரணியில் இடம்பெற்ற இருக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை..!
வரணியில் இடம்பெற்ற இருக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை..!
வரணி சிட்டிவேரம்
கண்ணகை அம்மன் ஆலய
அறநெறிப் பாடசாலையானது தனது 25வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளிவிழா நிகழ்வாக
வரணித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து
நடாத்தும் சுந்தரமூர்த்தி நாயனார்
குருபூசை விழா 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணி யா/இடைக்குறிச்சி ஸ்ரீசுப்பிரமணிய
வித்தியாலய மண்டபம் இடம்பெறவுள்ளது.
வரணியூர் சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர்
சிவத்திரு.சி.கா.கமலநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வானது
ஸ்ரீசக்திக் கிரியாகுருமணி,
சைவாகமபூஷணம், வரணியூர்
சிவஸ்ரீ.இ.குமாரசுவாமிக் குருக்களுடைய அருளாசியுடன் ஆரம்பமாகவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக
சைவப்புலவர், பண்டிதர்,
பொன். சுகந்தனும்,சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை ஆசிரியர்
செல்வி.தா.மு.தவமணி அவர்களும்,
கெளரவ விருந்தினராக
திருமதி.த.இராஜலட்சுமியும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
