சந்நிதியான் ஆச்சிரமத்தில் பஜனை..!
சந்நிதியான் ஆச்சிரமத்தில் பஜனை..!
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 02ம் நாள் திருவிழாவை முன்னிட்டு
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்
சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில்,
வடபிராந்திய சாயி சமித்தி நிலையத்தினரின் பஜனை நிகழ்வு இடம்பெற்றது.
இன்றைய இந் நிகழ்வில் சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் முருக அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
