யாழ் பல்கலைகழக சூழலில் இன்று 13.08.2026 பாரியளவிலான டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை...
யாழ் பல்கலைகழக சூழலில் இன்று 13.08.2026 பாரியளவிலான டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை...
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட யாழ் பல்கலைக்கழக சூழலில் இன்று 13.08.2026 பாரியளவிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக பதிவாளர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr. மகேந்திரன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் மற்றும் நல்லூர் பிரதேசசபை ஊழியர்கள் என இருநூறிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் யாழ் பல்கலைகழகத்தை சுற்றியுள்ள சுற்றாடல் பரிசோதிக்கப்பட்டதுடன், நுளம்பு பரவக்கூடிய கொள்கலன்கள் உடனடியாக நல்லூர் பிரதேசசபை கழிவகற்றல் பிரிவினரால் அகற்றப்பட்டது. அத்துடன் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்படி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
