Breaking News

SLMC - ACMC - TNA உட்பட ஆறு தமிழ் பேசும் கட்சிகள் விரைவில் கூட்டு உடன்படிக்கை.!!

 SLMC - ACMC - TNA உட்பட ஆறு தமிழ் பேசும் கட்சிகள் விரைவில் கூட்டு உடன்படிக்கை.!!



ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களுக்குப் பொதுவான விடயங்கள் குறித்து ஒன்றிணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையொன்றை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.


தற்போதைய சூழலில் பொதுவான நலன் சார்ந்த விடயங்களில் ஒன்றிணைந்து செயல்பட தாங்கள் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விபரங்களை நிகழ்வின் போது வெளிப்படுத்தப்போவதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இதில் உள்ளடங்குகின்றன.