Breaking News

சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி கொடியேற்றம்!


சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி கொடியேற்றம்!



யாழ் .சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முதலாவது மகோற்சவம், இன்று(29) கொடியேற்றத்தோடு சிறப்பாக ஆரம்பமாகியது.


சிவஸ்ரீ சோதிரத்தினக்குருக்கள் தலைமையில், வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கொடித்தம்பம் அருகில் வாரிவனம் முத்துமாரி அம்மன் எழுந்தருளினார்.


அதனைத் தொடர்ந்து மந்திர உச்சாடனத்தோடு வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.


பின்னர் அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பாற்குடம், கற்பூரச்சட்டி எடுத்து தமது நோர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.