இராணுவ தேவைக்கு காணி சுவீகரிப்பு, பிரதேச செ
இராணுவ தேவைக்கு காணி சுவீகரிப்பு, பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியது...!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாளை 09/07/2026 சுவீகரிக்க படவுள்ள 25 ஏக்கருக்கு மேற்பட்ட காணி மருதங்கேணி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்காகவே சுவீகரிக்கப் படவுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுவீகரிக்கப் படவுள்ள காணி அவசிய தேவை கருதி என அறிவித்தல் ஓட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அக்காணி இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
