Breaking News

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையக் கடைகள் ஜூலை 30 ம் திகதிக்குள் முழுமையாக மீளச் செயற்படுத்த தீர்மானம்..!

 கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையக் கடைகள் ஜூலை 30 ம் திகதிக்குள் முழுமையாக மீளச் செயற்படுத்த தீர்மானம்..!



கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் மீள்செயற்பாடு தொடர்பான முக்கிய தீர்மானங்கள்

மேற்கொள்ளும் கலந்துரையாடல் அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (13.07.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


இக்கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடைகளை மீள ஆரம்பித்து செயற்படுத்தல், கடைகளை திறக்கும் மற்றும் மூடும் நேரங்கள்,அக் கடைகளுக்கான பாதுகாப்பு சேவையாளர்களை பெற்றுக்கொள்ளல், நாளாந்தம் சேரும் கழிவுகளை சேகரித்து பிரதேச சபைகளிடம் ஒப்படைத்தல் மற்றும் இதர வாகன தரிப்பிட வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. 


குறிப்பாக உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கம் கருதி இம்மாதம் 30ஆம் திகதிக்குள் அனைத்து விற்பனை நிலையங்களையும் மீள இயங்கு நிலைக்கு கொண்டுவரல் வேண்டுமெனவும், ஒவ்வொரு நாளும் சேரும் கழிவுகளை உரிய பைகளில் சேகரித்து பிற்பகல் 2 மணிக்கு பிரதேச சபை கழிவுகளை சேகரிக்கும் பிரிவினரிடம் ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 


மேலும் விற்பனை நிலையங்கள் காலை 4 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை திறந்திருக்க 

வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.


மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.


குறித்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் அவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் பொருளாதார மத்திய நிலைய உறுப்பினர்கள் மற்றும் நம்பிக்கை பொறுப்பு சபை உறுப்பினர்கள் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.