Breaking News

2026 ஆம் ஆண்டு கால்பந்து போட்டியில் தனது அபாரமான விளையாட்டால் ரசிகர்களைக் கவர்ந்த நோர்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) மீதுள்ள அன்பால், பெரு நாட்டில் இந்த மாதம் பிறந்த 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 2026ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் தனது அறிமுகத்திலேயே 7 கோல்களை அடித்து, இளம் மேதையாக ஹாலண்ட் முத்திரை பதித்தார்.

இதனைக் கொண்டாடும் முகமாக, பெருவில் பிறந்த 468 குழந்தைகளுக்கு 'ஹாலண்ட்' என்றும், 91 குழந்தைகளுக்கு 'எர்லிங் ஹாலண்ட்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பெரு நாட்டு மக்களிடையே தங்களுக்குப் பிடித்த கால்பந்து வீரர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு வழக்கமாகும்.

அதன்படி, இதற்கு முன்னதாக அந்த நாட்டில் நெய்மர் (33,809), மெஸ்ஸி (3,402), லமின் யமால் (1,241) மற்றும் ரொனால்டோ (1,185) ஆகிய வீரர்களின் பெயர்கள் பெருவாரியான மக்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வரிசையில் எர்லிங் ஹாலண்டும் இணைந்துள்ளது, கால்பந்து விளையாட்டின் மீதான அந்த நாட்டு மக்களின் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்து.