சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் ஊடகவியலாளர் நடேசனுக்கு நினைவேந்தல்.....!
சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் ஊடகவியலாளர் நடேசனுக்கு நினைவேந்தல்.....!
2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் பருத்தித்துறை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்யப்பட்டது
குறித்த நிகழ்வானது சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டிபன் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது பின்னர் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்களால் மலர் மாலை அணியப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
நிகழ்வின் நினைவுறையினை சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் நிருவுனரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான காண்டீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்களால் வழங்கப்பட்டது
இவ் நிகழ்வில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் குடத்தனை வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் மற்றும் ஊடகவியலாளர் லின்ரன் என பலரும் கலந்து கொண்டனர்
