பல மாதங்களாக கடலில் மீன்பிடி இன்றி மீனவர்கள் பாதிப்பு, இதனால்தான் காணாமல் போன மீனாவர்கள் காலநிலையை கருத்தில் கொள்ளாது கடலிற்கு சென்றனர். நா.வர்ணகுலசிங்கம்.
பல மாதங்களாக கடலில் மீன்பிடி இன்றி மீனவர்கள் பாதிப்பு, இதனால்தான் காணாமல் போன மீனாவர்கள் காலநிலையை கருத்தில் கொள்ளாது கடலிற்கு சென்றனர். நா.வர்ணகுலசிங்கம்.
பல மாதங்களாக கடலில் மீன்பிடியால் வருமானம் இன்றி மீனவர்கள் பெரிதும் பாதிக்க பட்டதாகவும், இதனால்தான் காணாமல் போன மீனாவர்கள் மோசமான காலநிலையையும் கருத்தில் கொள்ளாது ஆழ் கடலிற்கு மீன் பிடிக்க செல்ல வேண்டி ஏற்பட்டதாகவும். இவ்வாறு வாழ்வாதாரத்திற்காக சென்றவர்களே காணாமல் போனவர்கள் என வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று பருத்திதுறையில் சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது
நான்கு நாட்களுக்கு முன்னர் கடற்றொழிலிற்கு சென்று காணாமல் போன மீனவர்களை தேடுவதற்காக கடற்படை, விமானப்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு உட்பட அனைவருக்கும் அறிவித்தும் அவர்கள் உரிய அக்கறை காட்டாமையாலேயே மீனவர்களை மீட்க முடிவவில்லை என்றும்,
சட்டவிரோத கடற்றொழில்களை கடற்றொழில் மாற்றும் நீரியல் வளத்துறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகளாலும் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும், பல மாதங்களாக மீனவர்கள் வருமானம் இன்றி அவதிப்படுவதாக்கவும், இந் நிலையில்தான் மோசமான காலநிலையிலும் மீனவர்கள் ஆழ்கடலிற்க்கு சூடை மீன் பிடிக்க சென்று வருவதாகவும் மீனவர்கள் பிரச்சினையை எவரும் கண்டு கொள்வதில்லை என்றும், எவ்வளவோ பிரச்சினைகள் பேசப்பட வேண்டி இருந்தும் அர்ச்சுனா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த காணி பிராசினைக்கு துப்பாக்கியை காட்டி பயமுறுத்தும் வேலைகளில் ஈடுபடுவதக்கவும் தெரிவித்தார்
